அன்பே பிரதானம்

அன்பே பிரதானம், –
சகோதர அன்பே பிரதானம்.

1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
இன்ப விசுவாசம், – இவைகளிலெல்லாம்
-( அன்பே…..)

2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் – கைம்மணியாமே
-( அன்பே…..)

3.
என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
அன்பில்லையானால் – அதிற்பயனில்லை
-( அன்பே…..)

4.
துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதிலில்லை
-( அன்பே…..)

5.
சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள
-( அன்பே…..)

6.
புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா
-( அன்பே…..)

7.
சினமடையாது, – தீங்கு முன்னாது,
தினமழியாது, – தீமை செய்யாது
-( அன்பே…..)

8.
சகலமுந் தாங்கும், – சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்
-( அன்பே…..)



anbe pirathanam

anbe pirathanam, –
sakodhara anbe pirathanam.

1.
panburu njanam,- parama nambikkai,
inba visuvasam, – ivaikalilellam
-( anbe…..)

2.
palapala bashai – padithdharinththalum,
kalakala vennum – kaimmaniyame
-( anbe…..)

3.
en borul yavum – iinthdhaliththalum,
anbillaiyanal – athirpayanillai
-( anbe…..)

4.
thunivuta nutalais – sutakkoduththalum,
paniya anbillal – payanathilillai
-( anbe…..)

5.
santhdhamum dhayavum – sakala narkunamum
bonthdha saththiyamum – porumaiyumulla
-( anbe…..)

6.
bukaziru mabbu, – bozivu boramai,
pakaiya niyayab – bavamunj seyya
-( anbe…..)

7.
sinamadaiyathu, – thingku munnathu,
thinamaziyathu, – thimai seyyathu
-( anbe…..)

8.
sakalamunth thangkum, – sakalamum nambum,
mikaipata venrum – menmai petrrongkum
-( anbe…..)